17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாம்பவர் வடகரையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு..

சாம்பவர் வடகரையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு..

எழுதியவர்: mohan March 25, 2021, 6:02 pm

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமைதியாகவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதன் படி தென்காசி மாவட்டம் முழுவதும் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

‌ அந்த வகையில், தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரையில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். சாம்பவர் வடகரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு அச்சன்புதூர் வேல்கனி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டு முருகேஸ்வரன் மற்றும் துணை ராணுவத்தினரும், போலீசாரும் சாம்பவர் வடகரை காவல் நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!