17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திருப்பரங்குன்றம் நிலையூரில் வேலைக்கு சென்ற கட்டிட தொழிலாளி வெட்டி படுகொலை.

திருப்பரங்குன்றம் நிலையூரில் வேலைக்கு சென்ற கட்டிட தொழிலாளி வெட்டி படுகொலை.

எழுதியவர்: mohan March 25, 2021, 5:52 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் நரசிம்மன் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் நந்தினி குமார் (வயது 34 )இவருக்கு முன் ஈஸ்வரி என்ற மனைவியும் ஜனார்த்தனன் என்ற 7 மாத குழந்தையும் உள்ளது இந்நிலையில் நந்தினி குமார் கட்டிட தொழிலாளர் வேலை செய்து வருகிறார் இன்று காலை வீட்டிலிருந்து ஒன்பதரை மணி அளவில் அருகில் உள்ள கட்டிடத்தில் ஜாமங்கள் எடுப்பதற்காக சென்றபோது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது .இதில் சம்பவ இடத்திலேயே நந்தினி குமார் பலியானார் கொலை சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நந்தினி குமாரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த நந்தகுமாரின் கொலைக்கான காரணம் உள்ளதா என போலீசார் விசாரணையில் நந்தினி குமாருக்கும் சுரேஷ் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வில்லாபுரம் பத்மா தியேட்டர் அருகே தங்கமணி என்பவர் நேற்று நள்ளிரவு கொலை செய்யப்பட்டார் அதேபோல் இன்று பகல் 9 மணியளவில் நந்தினி குமார் கொலை செய்யப்பட்டார் மேலும் சிந்தாமணி பகுதியில் ஒரு கத்திகுத்து நடந்துள்ள சம்பவம் நடந்துள்ளது போலீசார் தேர்தல் பணியில் கவனம் செலுத்துவதால், பாதுகாப்பு பணியில் காவலர்கள் இல்லாததே குற்றச் சம்பவங்கள் நடைபெறக் காரணம் எனக் கூறப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!