17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் கதிரேசன் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து கண்ணீர் மல்க மரியாதை.

மதுரை தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் கதிரேசன் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து கண்ணீர் மல்க மரியாதை.

எழுதியவர்: mohan March 25, 2021, 10:20 am

மதுரை தெற்கு மாவட்ட மதிமுக செயலாளராக இருப்பவர் கதிரேசன்.மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கதிரேசன் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.மேலும் மதிமுக கட்சியில் 27 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.மேலும் மதிமுக மதுரை தெற்கு மாவட்ட செயலாளராகஇருந்து வருகிறார்.இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று திடீரென்று இயற்கை எய்தினார்.அண்ணாரது துயர செய்தி கேட்டு வருத்தமடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை கலிங்கப்பட்டியில் இருந்து புறப்பட்டு மதுரைமாவட்டம் அவனியாபுரத்தில் உள்ள கதிரேசன் வீட்டிற்குசென்று அவரது பூதவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து அவருடைய மனைவி மகன்கள் உட்பட குடும்பத்தினருக்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!