18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவுதமிழக ஆளுநர் , முதல்வர், துணை முதல்வர் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்.

அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவுதமிழக ஆளுநர் , முதல்வர், துணை முதல்வர் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்.

எழுதியவர்: mohan March 24, 2021, 5:22 pm

ராணிப்பேட்டையை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் முகமது ஜான் (72) நேற்று மாரடைப்பால் காலமானார்.நேற்று மாலை ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வந்தார் முகமது ஜான்.மதியம் வீடு திரும்பிய அவர் மதிய உணவை முடித்து மாலை 4.30 மணிக்கு வாலாஜா நோக்கி காரில் சென்றார்.சாலையில் காரில் சென்று கொண்டு இருக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.உடனடியாக அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என உறுதி செய்தனர்.இறந்த முகமது ஜானுக்கு மனைவி மற்றும் 3 ஆண்கள் ஒரு பெண்மகள் உள்ளனர்.2011-ம் ஆண்டில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அமைச்சராக இருந்தார்.2019-ம் ஆண்டு ராஜ்சபா எம்.பி. ஆனார்.இவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவுநர் ராமதாஸ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.அமைச்சர்கள் வீரமணி, நீ லோபர் கபீல், ஆட்சியர் புஷ்பராஜ் அதிமுக வேட்பாளர்கள் ,கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.இன்று புதன்கிழமை பிற்பகல் ராணிப்பேட்டை ஈத்கா மைதானத்தில் தொழுகைக்கு பிறகு பஜார் மசூதியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!