17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » வடக்குத் தெரு முகைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மற்றும் ஆண்டு விழா..

வடக்குத் தெரு முகைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மற்றும் ஆண்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் November 26, 2017, 6:31 pm

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 27 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தினம் இன்று (26-11-2017) பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா தாவூத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கீழக்கரை தாசில்தார் கணேசன் விளையாட்டு விழாவுக்கான சிறப்புரையாற்றி விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.  கீழக்கரை வட்ட வழங்கல் அதிகாரியாக பணியாற்றிய தமீம் ராசாவும் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். விளையாட்டு போட்டிகளை தமீம் ராசா விளையாட்டு ஜோதியை ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பின் சார்பாக இந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு இறுதி தேர்வில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு முறையே ₹.5,000/- மற்றும் ₹.10,000/- ரொக்கம், கோப்பை மற்றும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த பரிசுத் தொகை கடந்த பல வருடங்களாக வெற்றி மாணவ, மாணவிகளுக்கு கொடுக்கப்பட்டு வருவது முக்கிய அம்சமாகும். நிகழ்ச்சி தொடங்கிய பொழுது மழை பெய்ய தொடங்கினாலும் மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வம் குறையாமல் இறுதி வரை கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகிகள் மௌலா முகைதீன், முகைதீன் இபுராஹிம், பசீர் மரைக்கா, அஹமது மிர்சா, டாக்டர்.ராசிக்தீன், சாதிக், ரஃபீக், முன்னாள் நகர் மன்ற தலைவர் பசீர் அகமது, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஹாமிது இபுராஹிம்  ஆகியோருடன் இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் பள்ளயின் தலைமை ஆசிரியர் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வீடியோ & புகைப்படத் தொகுப்பு:-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!