17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பட்டப்பகலில் மூதாட்டியிடம் 33 பவுன் நகை அபேஸ் மர்ம ஆசாமிகள் கைவரிசை.

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 33 பவுன் நகை அபேஸ் மர்ம ஆசாமிகள் கைவரிசை.

எழுதியவர்: mohan March 24, 2021, 11:12 am

மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் 33 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை தானப்ப முதலி தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி 62.இவர் மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் நடந்து சென்ற போது அவரிடம் நல்லவர்கள் போல 2 மர்ம நபர்கள் அறிமுகமாகி அவர் அணிந்திருந்த நகைகளை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளும்படி கூறி உள்ளனர் .அவர்கள் பேச்சை நம்பிய அந்த மூதாட்டி 32 பவுன் தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்து கைப்பையில் வைத்துள்ளார். பின்னர் அந்த நகையை பார்த்தபோது கைப்பையில் இருந்த நகை திருடு போயிருந்தது. இது தொடர்பாக மூதாட்டி சரஸ்வதி திடீர் நகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி ஆசாமிகள் இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!