18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காளையை அதிமுக அடக்கும் இடம் அவனியாபுரம் என திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் வி‌.வி ராஜன் செல்லப்பாவை ஆதரித்து நடிகை பரப்புரை.

காளையை அதிமுக அடக்கும் இடம் அவனியாபுரம் என திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் வி‌.வி ராஜன் செல்லப்பாவை ஆதரித்து நடிகை பரப்புரை.

எழுதியவர்: mohan March 23, 2021, 11:42 am

மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் வி.வி ராஜன் செல்லப்பாவை ஆதரித்து அதிமுக அவை கழகப் பேச்சாளர் நடிகை விந்தியா அவனியாபுரம், மாநகராட்சி காலனி வள்ளனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரைமேற்கொண்டார் அப்போது அவர்களை பொதுமக்கள் மலர் தூவியும் ஆரத்தி எழுத்தும் வரவேற்றனர்.அப்போது மக்கள் முன்னிலையில் நடிகை விந்தியா பேசியபோது : கொம்பு வைத்த காளைகளை தெம்பு வைத்த காளைகள் அடக்கும் இடம் இது அவனியாபுரம் என கூறினார்அதைப்போல் வருகிற சட்டமன்ற தேர்தலில் கொம்பு உடைந்த திமுக என்கின்ற காளையை அதிமுகவினர் நடக்கும் இடம் இது என்றார். எனவே உங்களது தொகுதி வேட்பாளர் வெற்றி அடைய செய்ய இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களியுங்கள் என பிரச்சாரம் செய்தார்.தேர்தல் வந்தவுடன் கெட்டப் போட்டு விட்டு கிளம்பி விடுவார் செயல் தலைவர் தற்போது செயல்படாது தலைவராக என்று ஸ்டாலினை விமர்சித்தார்.தொடர்ந்து திமுக கூட்டணியில் 6 கட்சிகள் வந்தாலும் 100 காட்சிகள் வந்தாலும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது எனக்கூறினார்தற்போது அதிமுக வெற்றி நடைபோடு தமிழகமாக உள்ளது இதை வீரநடை போடும் தமிழகமாக மாற்றுவதற்காக அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என பிரச்சாரம் செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!