17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் ரூ 2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல்

வேலூரில் ரூ 2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல்

எழுதியவர்: mohan March 22, 2021, 7:30 pm

வேலூர் மாவட்டத்திற்கு அடிக்கடி கர்நாடக மாநிலத்திலிருந்து போதை பொருள்கள் கடத்தி வருவது வாடிக்கை ஆகிவிட்டது.இந்நிலையில் நேற்று காலை வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர்மாங்காய் மண்டி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது மினிவேன் ஒன்றை சோதனை செய்தபோதுஅதில் பிஸ்கெட் பாகெட்டுகள் இருப்பதாக அதில் இருந்தவர்கள் கூறினர்.ஆனால் பிஸ்கெட்டுக்கு பின்னால் தடைசெய்யப்பட்ட குட்கா, மற்றும் புகையிலை பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.காவல்துறையினர் அதை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ 2 லட்சமாகும்.மினி வேனையும் கைப்பற்றி கடத்தி வந்தமைசூரை சேர்ந்த ஜூனைக்கான் (22) விவேக்ராஜ்(28) ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!