18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் பா.ஜ. க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

உசிலம்பட்டியில் பா.ஜ. க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

எழுதியவர்: mohan March 22, 2021, 6:10 pm

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல்6ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக அய்யப்பன் போட்டியிடுகிறார். இந்நிலையில் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் மஹாலில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக்; கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் சுசேந்திரன் தலைமையிலும், அதிமுக வேட்பாளர் அய்யப்பன் முன்னிலையிலும் பாஜக மாவட்ட செயலாளர் பிடிஆர் சொக்கநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி ஒதுக்குவது, நோட்டீஸ் வழங்கும் பணிகள், வாக்கு சேகரிக்கும் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைதொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்பு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் கறிவிருந்து (அசைவ) பரிமாறப்பட்டது. இதில் உசிலம்பட்டி பாஜக தொகுதி ஒருங்கிணைப்பாளர் மொக்கராஜ்தேவர் அதிமுக நகரசெயலாளர் பூமாராஜா மற்றும் பாஜக நிர்வாகிகள்,அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!