17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆலங்குளம் வேட்பாளருக்கு மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு..

ஆலங்குளம் வேட்பாளருக்கு மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு..

எழுதியவர்: mohan March 22, 2021, 11:18 am

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மனோஜ் பாண்டியனுக்கு மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.மூவேந்தர் முன்னணி கழக திருச்சூழி ராஜசேகரன் ஆலோசனையின் பேரில் தென்காசி மாவட்ட மூவேந்தர் முன்னணி கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் மாவட்ட மாணவரணி செயலாளர் அமரன் மணி, இணைச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் வேல் கிருஷ்ணன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடப் போவதாக தெரிவித்தனர். அப்போது முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான கேஆர்பி பிரபாகரன், ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், ஞானம் மற்றும்  நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!