18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.நைனாகண்ணு ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை.

செங்கம் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.நைனாகண்ணு ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை.

எழுதியவர்: mohan March 22, 2021, 10:26 am

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக மீண்டும் 3வது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என முதல்வர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனித்தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்எஸ் நைனா கண்ணு ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்;-செங்கம் தனித் தொகுதி அதிமுக வேட்பாளர் எம் எஸ் நைனா கண்ணு எளிமையானவர். மக்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று செயல்படுத்த கூடியவர் திறமையானவர் பண்பாளர்.செங்கம் பகுதிவாழ் மக்கள் பெரும்பாலும் விவசாயிகள். விவசாயத் தொழில் நிறைந்த செங்கம் பகுதியில் வேளாண் துறை மூலம் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.9,300 கோடி பயிர் நஷ்டஈடு பெற்று தந்த மாநிலம் தமிழ்நாடு தான். மக்கா சோளத்தில் அமெரிக்கன் படை புழு ஒழிக்க ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. விவசாயிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை ஏற்று விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.விவசாயிகள் கஷ்டம் நீங்கி ஏற்றம் பெறுவதற்காக பாடுபடும் அரசு அதிமுக அரசு. விவசாயிகளுக்கு முதன்முறையாக நஷ்டஈடு வழங்கியது அதிமுகதான். இந்தியாவிலேயே, சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக மானியம் அளிப்பது தமிழக அரசு தான் . நீர் மேலாண்மையில் சிறந்த அரசு என்கிற விருதை தமிழக அரசு பெற்றுள்ளது. விவசாயிகளுக்காக குடிமராமத்து பணிகளை பொதுப்பணித் துறையில் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தபடுவதால் உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள தாய்மார்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தை 95% சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிதிமுக ஆட்சியில் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது வரும் என்று தெரியாமல் இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. நம்முடைய வேட்பாளர் எம் எஸ் நைனா கண்ணு -க்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்பிரச்சாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி,, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பிரசாத், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் ,அதிமுக தெற்கு மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அருணாச்சலம், தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர்கள் தேவராஜன், ஜானகிராமன், செங்கம் நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் தனஞ்செயன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் கே கே மணி ,மாவட்ட பிரதிநிதி மேல் பெண்ணாத்தூர் முருகன் ,ராஜன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் பத்மா முனிகண்ணு, முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!