17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி யில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஐந்துகோவிலானை ஆதரித்து சீமான் பிரச்சாரத்தில் ஈடபட்டார்.

உசிலம்பட்டி யில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஐந்துகோவிலானை ஆதரித்து சீமான் பிரச்சாரத்தில் ஈடபட்டார்.

எழுதியவர்: mohan March 21, 2021, 2:21 pm

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஐந்துகோவிலான் என்பவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் செய்தார். அப்போது உசிலம்பட்டி பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதாக பேசினார். மேலும் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி சாதி வாரி இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், பெருங்காமநல்லூர் கிராமத்தில் வீர தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் எனவும், சீமான் அனைத்து பகுதிகளிலும் உள்ள கண்மாய்களை தூர்வாரி மரக்கன்றுகளை நடுவேன் எனவும், ஓட்டுக்கு காசு கொடுப்பன் பாவி எனவும் ஓட்டுக்கு காசு வாங்கிட்டு ஓட்டு போடுபவன் தேச துரோகி எனவும், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய்க்கு நிரந்திர அரசானை வழங்கப்படும் எனவும், நாடும் நாமும் நல்லா வாழ வேண்டும் என்றால். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கன் என பேசிவிட்டு சீமான் பிரச்சாரத்தை முடித்தார்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!