17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அதிமுக வேட்பாளர் எம்எஸ் நைனா கண்ணு வாக்கு சேகரிப்பு.

செங்கம் அதிமுக வேட்பாளர் எம்எஸ் நைனா கண்ணு வாக்கு சேகரிப்பு.

எழுதியவர்: mohan March 21, 2021, 2:04 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றம் தனித்தொகுதியில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செங்கம் பேரூராட்சிக்கு ட்பட்ட தோக்கவாடி பகுதியில் தேசமுத்து மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வார்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதிமுகவின் வேட்பாளர் எம்.எஸ்.நைனா கண்ணு அதிமுக சாதனைகள் குறித்தும் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைவருக்கும் வீடுகுலவிளக்கு திட்டம்,பேருந்தில் மகளிருக்கு சலுகை,ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்விலையில்லா ஆறு கேஸ் சிலிண்டர்அனைவருக்கும் சூரிய சக்தி சமையல் சிலிண்டர் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜிவீட்டில் ஒருவருக்கு அரசுப் பணிவிலையில்லா அரசு கேபிள்தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம்எழுவர் விடுதலைதமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமைகாத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு நம்மாழ்வர் பெயரில் வேளாண் ஆராய்ச்சி மையம்பெட்ரோல் டீசல் விலை குறைப்பு100 நாட்கள் வேலை 150 நாட்களாக உயர்வுமதுமான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்சிஏஏ-ஐ கைவிட வலியுறுத்தல்கல்வியை மாநில பட்டியலில் சேர்த்தல்அம்மா வாஷிங் மெஷின் திட்டம்மாணவர் கல்விக் கடன் தள்ளுபடி என அனைத்து திட்டமும் நிறைவேற்றப்படும் என்று பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரித்தார். தோக்கவாடி, புதிய பேருந்து நிலையம், செந்தமிழ் நகர், பழைய பேருந்து நிலையம், ராஜவீதி, சிவன் கோயில் தெரு, மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி பொதுமக்களிடத்தில் கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அருணாசலம், செங்கம் நகர செயலாளர் ஆனந்தன் , நகர அம்மா பேரவை செயலாளர் குமார் ,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் கே.கே.மணி, சேட்டு, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பத்மா முனிகண்ணு, மாவட்ட பிரதிநிதி மேல் பெண்ணாத்தூர் முருகன், ராஜன், முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் கட்சி நிர்வாகிகள் தோழமை கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!