17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நடுமுதலைக்குளம் கிராமத்தில் அமமுக வேட்பாளர் மகேந்திரன் குக்கர் சின்னத்தில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நடுமுதலைக்குளம் கிராமத்தில் அமமுக வேட்பாளர் மகேந்திரன் குக்கர் சின்னத்தில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எழுதியவர்: mohan March 21, 2021, 1:06 pm

தமிழகம் முழவதும் வருகிற ஏப்ரல்6ம்தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் குக்கர் சின்னத்தில் வேட்பாளராக இ.மகேந்திரன் போட்டியிடுகிறார். இதனையொட்டி செல்லம்பட்டி பகுதிளான பன்னியான், கீழப்பட்டி, சிவநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளர் மகேந்திரன் பொதுமக்களிடையே குக்கர் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது நடுமுதலைக்குளம் கிராமத்தில் விவசாய நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் அமமுக வேட்பாளர் அமமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு அந்த பகுதிமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!