திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள மல்லியம்பட்டியை சேர்ந்த ராஜா என்பவர் மனைவி கார்த்திகா வயது 26. இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திகா
வீட்டின் மேற்கூரையில் இருந்தால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் தேவ தாசனுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக போலீசார் விரைந்து சென்று பிரேத பரிசோதனைக்காக கார்த்திகாவின் உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கார்த்திகாவின் தந்தை ஜெயராமன் கொடுத்த புகாரின்படி நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் இதுகுறித்து திண்டுக்கல் ஆர்டிஓ மேல் விசாரணை செய்துவருகிறார். 2 குழந்தைகளை விட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நிலக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை
எழுதியவர்: mohan March 19, 2021, 9:34 am



You must be logged in to post a comment.