திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் அதிமுக செயல்வீரர்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கூட்டம் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு
மாவட்ட கழக செயலாளர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பேசுகையில் ;தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக முதல்வர் பழனிசாமிக்குப் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்ட போதிலும், மக்கள் விரும்பும் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை அறிவித்துள்ளது அதிமுக. ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் அதில் அடங்கும்.மேலும் ,செங்கம் அதிமுக வேட்பாளர் எம்.எஸ். நைனாகண்ணு எளிமையானவர் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்பவர். என்று பேசினார். நிகழ்ச்சியின் முன்னதாக செங்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.கூட்டத்தில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன், செங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருணாச்சலம், தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர்கள் தேவராஜன், ஜானகிராமன், ஜவ்வாதுமலை தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.சி.அசோக் , மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தனஞ்செயன், நகர அம்மா பேரவை செயலாளர் குமார், நகர செயலாளர் ஆனந்தன், எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் கே.கே.மணி, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் பத்மா முனிகண்ணு, மாவட்ட பிரதிநிதி மேல் பெண்ணாத்தூர் முருகன், முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் மாவட்ட பிரதிநிதி ராஜன் உட்பட தோழமை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
செங்கத்தில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
எழுதியவர்: mohan March 18, 2021, 3:44 pm



You must be logged in to post a comment.