18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் பகுதி பெண் ஆசிரியர்களுக்கு அந்தந்த தொகுதியில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

செங்கம் பகுதி பெண் ஆசிரியர்களுக்கு அந்தந்த தொகுதியில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

எழுதியவர்: mohan March 18, 2021, 9:39 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டப்பேரவை தேர்தல் தொகுதி தேர்தலில் ஈடுபடும் என்ன ஆசிரியர்களுக்கு அந்தந்த தொகுதியிலேயே தேர்தல் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பெண் ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் செங்கம் பகுதி பெண் ஆசிரியர்கள் தேர்தல் பணி குறித்து கூறப்படுவதாவது ;தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு முறையாக வழங்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியருக்கு அந்தந்த தொகுதியிலேயே இத்தேர்தல் குறிப்பிட்ட பணியை செய்யப்படவேண்டும். பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!