தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி 26 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி ஏப்.6 அன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக
அரசியல் கட்சிகள் வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகம்மது அபுபக்கர் எம். எல். ஏ. , வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் புளியங்குடி திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் மேலக்கடையநல்லூர் நாகம்மாள் திருமண மண்டபத்தில் 16.03.21 செவ்வாய் கிழமை நடந்தது.கூட்டத்தை தொடர்ந்து கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகம்மது அபுபக்கர் எம். எல். ஏ. தேர்தல் நடத்தும் அலுவலர் ஷீலாவிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் யூனியன் தலைவர் ப. சட்டநாதன் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்



You must be logged in to post a comment.