18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மத்திய தொகுதி எஸ்.டி.பி.ஐ அமமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் சிக்கந்தர் பாட்ஷா மனுதாக்கல் செய்தார்.

மதுரை மத்திய தொகுதி எஸ்.டி.பி.ஐ அமமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் சிக்கந்தர் பாட்ஷா மனுதாக்கல் செய்தார்.

எழுதியவர்: mohan March 17, 2021, 4:17 pm

மதுரை மத்திய தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிக்கந்தர் பாட்ஷா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையொட்டி இன்று காலை 11 மணியளவில் க்ரைம் ப்ராஞ்ச் பகுதியில் இருந்து கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மத்திய தொகுதி தேர்தல் பணிக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் சுல்பிகர் அலி, மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தொண்டர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக வந்தனர்.

இதில் கூட்டணி கட்சியினருடன் வேட்பாளர் ஊர்வலமாக வந்த அனைவரையும் டவுன் ஹால் ரோடு பகுதியில் நிறுத்தி விட்டு…எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரபீக் அஹமது, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம், தேசிய முற்போக்கு திராவிட கழக மாவட்ட செயலாளர் சிவ முத்துக்குமார், ஆகியோருடன் மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகம் 4ல் வந்து வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி கோட்டூர்சாமி அவர்களிடம் தாக்கல் செய்தார்.இதன் பின் வெளியே வந்த வேட்பாளர் சிக்கந்தர் பாட்ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில்,நான் போட்டியிடக்கூடிய மதுரை மத்திய தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத மக்கள் பிரச்சனைகளை சரி செய்வதே முதல் பணி.பாதாள சாக்கடை மற்றும் சாலை சீரமைப்பு போக்குவரத்து நெரிசல் களுக்கு மாற்று வழி ஏற்படுத்துதல்.கிருதுமால் நதி என்பது சாக்கடையாக மாறி சுகாதார சீர்கேடு இவற்றை சீர்படுத்தி சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும்வகையில் மாற்றுத் திட்டங்கள் ஏற்பாடு செய்வது.ஏழை எளிய மாணவர்களின் கல்வி முன்னேற்றம் சார்ந்த திட்டங்கள் பெண்களின் சுய தொழில் வளர்ச்சிக்கான மாற்றுத் திட்டங்கள் இவை மட்டுமல்லாமல் அமமுக தேர்தல்அறிக்கை சிறப்பாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!