17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரன் தேர்தல் நடத்தும் அதிகாரியான ராஜ்குமாரிடம் வேட்பு மனு தாக்கல்.

உசிலம்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரன் தேர்தல் நடத்தும் அதிகாரியான ராஜ்குமாரிடம் வேட்பு மனு தாக்கல்.

எழுதியவர்: mohan March 17, 2021, 2:51 pm

தமிழகம்முழுவதும் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளராக அமைப்பு செயலாளர் மகேந்திரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.இந்நிலையில் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான ராஜ்குமாரிடம் அமமுக வேட்பாளர் மகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துகொண்டார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் நகர செயலாளர் குணசேகர பாண்டியன், தேமுதிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!