திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க வேட்பாளராக எஸ்.தேன்மொழி சேகர் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை கழகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் எஸ். தேன்மொழி சேகர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் நிலக்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து எஸ் தேன்மொழி சேகரின் கணவரும், நிலக்கோட்டை நகர செயலாளருமான வி.எஸ்.எஸ் சேகர் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நிலக்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன் முன்னிலையில் எஸ் தேன்மொழி சேகர் , அவரது கணவர் சேகர் ஆகியோர்கள் சத்தியப்பிரமாணம் செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்போது உடன் நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், வத்தலகுண்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன், வத்தலகுண்டு மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், உள்பட பலர் இருந்தனர்.படவிளக்கம்: நிலக்கோட்டை அ.தி-மு.க.சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ் .தேன்மொழி சேகர் வேட்புமனு தாக்கல் செய்தபோது எடுத்தப்படம்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
நிலக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். தேன்மொழி சேகர் வேட்புமனு தாக்கல்.
எழுதியவர்: mohan March 17, 2021, 9:51 am



You must be logged in to post a comment.