17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து…அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தொகுதியில் பல்வேறு இடங்களில் ஆலோசனை..

இராமநாதபுரம் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து…அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தொகுதியில் பல்வேறு இடங்களில் ஆலோசனை..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2021, 10:17 pm

இராமநாதபுரம் திமுக வேட்பாளர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் இன்று (16/03/2021) நிகழ்வின் தொடக்கமாக சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பணிகளை தொடங்கினார்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக  கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு வருகை தந்தார். கூட்டமைப்பு ஜமாஅத் தலைவர் செயலாளர் நிர்வாகிகள், மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளிடமும்  ஆதரவு கேட்டு உரையாற்றினார். பின்னர் நகரிலுள்ள பள்ளிவாசல்களுக்கும் சென்று ஓட்டு சேகரிப்பதை தொடர்ந்து பல வேறு சங்க நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கோரினார்.

இவரவருகையின் போது கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேட்பாளர் வருகையின் போது கீழக்கரை திமுக மற்றும் ஆதரவு கட்சி நிர்வாகிகள் வெடி வெடித்து வரவேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!