17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடிமங்கலம் கிராம பகுதியில் அமைச்சர் செல்லூர் கே ராஜூ இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்:

கொடிமங்கலம் கிராம பகுதியில் அமைச்சர் செல்லூர் கே ராஜூ இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்:

எழுதியவர்: mohan March 16, 2021, 11:30 am

மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக மீண்டும் அமைச்சர் செல்லூர் கே ராஜூ போட்டியிடுகிறார். இத்தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு தொகுதியைச் சேர்ந்த கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், காமாட்சிபுரம் மற்றும் முத்து துவரிமான் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் சென்று இரட்டை இலைச் சின்னத்தில் ஓட்டு போடும் படி வாக்கு சேகரித்தார்.வேட்பாளர் செல்லூர் கே ராஜூ கிராமந்தோறும் 200 பெண்கள் சிறுமிகள் பலர்பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்ததுடன், வழிநெடுக மக்கள் குலவை போட்டு ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு சிறப்பாக வரவேற்றனர் எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கு என்றனர் பரவை ராஜா இதில் அதிமுக நிர்வாகிகள் பரவை ராஜா, மேயர் திரவியம், மாவட்ட பாண்டியன் கூட்டுறவு சங்கத் தலைவர் எம் எஸ் பாண்டியன் செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை, வில்லாபுரம் ராஜா மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தங்கராஜ் மகளிர் மாவட்டச் செயலாளர் சுகந்தி அசோக் செயற்குழு உறுப்பினர் சண்முகவள்ளி மாவட்ட துணைச் செயலாளர் தங்கம் சோலை ராஜா கொடிமங்கலம் ஊராட்சி செயலாளர் முருகன் கிளைச் செயலாளர் எம் கருப்பணன் மேலமாத்தூர் பொன்னையா, கீழமாத்தூர் ஊராட்சி செயலாளர் துரைப்பாண்டி ,கிளைச் செயலாளர்கள் அஜ்மீர் சாகுல் மைதீன் தங்கராஜ், சண்முகநாதன், கூட்டுறவு சங்கத் தலைவர் முத்து மற்றும் கூட்டணி கட்சியினர் பாஜக பாமக முஸ்லிம் கட்சி அமைப்புகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு அமைச்சருடன் வந்திருந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!