திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 100% வாக்களித்தல் குறித்த விழிப்புணர்வுக்காக சத்துணவு பணியாளர்களுக்கு கோலம் மற்றும் உணவு தயாரித்தல் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது இதில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சத்துணவு மிருலாலினி வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி பரிமேலழகன் ஆகியோர் தலைமையில் செங்கம் வட்டத்தைச் சார்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செங்கம் வட்டாட்சியர் மனோகரன் 100 சதவீத வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மேலும் சத்துணவு பணியாளர்கள் அனைவரும் அவரவர் ஊரிலுள்ள மக்கள் அனைவரும் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என கூறினார் சிறப்பாக கோலமிட்ட சத்துணவு பணியாளர்களுக்கும் சிறப்பாக உணவு தயாரித்த பணியாளர்களுக்கும் வட்டாட்சியர் மனோகரன் பரிசுகளை வழங்கினார்
செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 100% வாக்களித்தல் குறித்த விழிப்புணர்வு .
எழுதியவர்: mohan March 16, 2021, 11:05 am




You must be logged in to post a comment.