திருவண்ணாமலை செங்கம் சட்டப்பேரவைத் தனி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட மு.பெ.கிரி வேட்புமனு தாக்கல் செய்தாா்.செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசன் இடம் அவா் மனுவை அளித்தாா்.அப்போது, கட்சியின் மாநில மருத்துவ அணி செயலாளர் எ.வ.வே.கம்பன் தண்டராம்பட்டு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கட்சி நிர்வாகிகள் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னர் திமுக வேட்பாளர் மு.பெ.கிரி செங்கம் தொகுதி மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் என்றும், மக்களின் அடிப்படை வசதிகள் தருவேன் என்றும் ,செங்கம் தொகுதியில் தொழில் நிறுவனம் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வேன் என்று கூறினார்.
செங்கம் தொகுதியில் தொழில் நிறுவனம் கொண்டுவருவேன் திமுக வேட்பாளர் மு.பெ.கிரி உறுதி .
எழுதியவர்: mohan March 16, 2021, 10:52 am




You must be logged in to post a comment.