17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே புறநகர் பகுதியில் இரு பெண்களிடம் செயின் பறிப்பு ஒரு பெண் படுகாயம்.

மதுரை அருகே புறநகர் பகுதியில் இரு பெண்களிடம் செயின் பறிப்பு ஒரு பெண் படுகாயம்.

எழுதியவர்: mohan March 15, 2021, 10:54 am

மதுரை சிம்மக்கல் திருமலைராயர் படித்துறை தைக்கால்முதல் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 51 .இவர் சம்பவத்தன்று தேனி மதுரை மெயின் ரோட்டில் செக்கானூரணி பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த பைக்கில் வந்த 2 ஆசாமிகள் பாண்டியராஜனின் மனைவி அணிந்திருந்த 20 பவுன் தாலிச் செயின் மற்றும் ஆறுபவுனில்மற்றொருசெயின்என மொத்தம் 26 பவுனை பிடித்து இழுத்து பறித்துச்சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பாண்டியராஜன் மனைவி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து பாண்டியராஜன் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்… இதேபோன்று மற்றொரு சம்பவத்தில்.. நாகமலை புதுக்கோட்டையில் வங்கிக்கு சென்று திரும்பிய பெண்ணின் ஒன்றரை பவுன் செயின் பறிப்புபின்னால் சென்றவர் கைவரிசை மதுரை நாகமலை புதுக்கோட்டையில் வங்கிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பெண்ணின் ஒன்றரை பவுன் சங்கிலியை பின்னால் சென்ற சென்றவர் பறித்துச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். நாகமலை புதுக்கோட்டை சின்னகண்ணு நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் மனைவி தாரணி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று பின்னர் வீட்டிற்கு திரும்பினார்.அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம ஆசாமிஅவர் அணிந்திருந்த ஒன்றரைபவுன் செயினை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து தாரணி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின்பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்… அடுத்தடுத்து இரு பெண்களிடம் செயின் பறிப்பு நடந்தது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!