17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக சிட்டிங் எம்எல்ஏ சரவணனுக்கு சீட் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம்.

திமுக சிட்டிங் எம்எல்ஏ சரவணனுக்கு சீட் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan March 13, 2021, 10:06 am

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை இன்று ஸ்டாலின் வெளியிட்டார்.இதில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் டாக்டர் சரவணனுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.தொடர்ந்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியானது, திமுக தனது கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் தற்போதைய எம்எல்ஏவான டாக்டர் சரவணனுக்கு சீட் வழங்கப்படவில்லை. மேலும், சரவணனுக்கு சீட் வழங்கபடாததை கண்டித்தும், திருப்பரங்குன்றம் தொகுதியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கியதை கண்டித்தும் அவரது ஆதரவாளர்களும் திமுக மகளிர் அணியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திமுகவிற்கு மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியை ஒதுக்கீடு செய்யவில்லையானால் தேர்தல் பணியை புறக்கணிக்க போவதாகவும் கூறிஆர்ப்பாட்டம் செய்தனர்.வேட்பாளர் அறிவித்த நாளிலேயே திமுகவினர் தங்களது சொந்த கட்சிக்கே எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது அக்கட்சியினரிடையேஅதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!