17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே வைக்கோல் போர் எரிந்தது

நிலக்கோட்டை அருகே வைக்கோல் போர் எரிந்தது

எழுதியவர்: mohan March 12, 2021, 11:34 am

நிலக்கோட்டை அருகே தாமஸ் புரத்தைச் சேர்ந்த சார்லஸ் 53. இவர் விவசாயம் செய்து வருகிறார் விவசாயத்தோடு சேர்ந்து ஆடு மாடு கோழிகளை வளர்த்து வருகிறார். ஆடு மாட்டிற்கு தேவையான வைக்கோல் போர் தோட்டத்தின் ஒரு பகுதியில் அமைத்திருந்தார்.

சுமார் 45,000 மதிப்புள்ள வைக்கோல் எதிர்பாராவிதமாக தீப்பிடித்து எரிந்து நாசமானது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப்பிற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்று வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்ததை தண்ணீர் ஊற்றி அமர்த்தினார்கள். அதன் அருகில் சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள வைக்கோல் போர் காப்பாற்றப்பட்டது இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!