18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அனுப்பானடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை கைது செய்த அவனியாபுரம் போலீசார் 1.600 கிலோ கஞ்சா பறிமுதல் .

அனுப்பானடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை கைது செய்த அவனியாபுரம் போலீசார் 1.600 கிலோ கஞ்சா பறிமுதல் .

எழுதியவர்: mohan March 12, 2021, 10:36 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேல அனுப்பானடி, சிந்தாமணி,பனையூர் உள்ளிட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.எனவே அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் அதிகுந்தகண்ணன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து ஓட தொடங்கினர்.அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் சோதனை செய்ததில் அவர்களிடம் தடைசெய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரியவந்தது.தொடர்ந்து அவர்களை போலீசார் விசாரணை செய்ததில் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த பண்டாரி என்ற நீலமேகம் ( 37 ) சமணத்தம் சித்தார்த் (27) ஒத்தக்கடையை சுகில் அகமது (19 )கள்ளந்திரி நவநீதன் (19) என்பதும் தெரியவந்துள்ளது.தொடர்ந்து அவனியாபுரம் போலீசார் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்த 1.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!