17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் தேவேந்திர குல வேளாளர் ஒருங்கிணைந்து பாராளமன்ற மேலவையில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நிலக்கோட்டையில் தேவேந்திர குல வேளாளர் ஒருங்கிணைந்து பாராளமன்ற மேலவையில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

எழுதியவர்: mohan March 11, 2021, 11:56 am

தமிழ்நாட்டில் உள்ள தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கக் கோரி 7 பிரிவு மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதனை ஏற்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனை ஏற்று மத்திய அரசு பாராளுமன்ற கீழவை ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி மேலவைக்கு அனுப்பியது. இதனை ஏற்று பாராளுமன்ற மேலவை கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நிலக்கோட்டையில் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் செங்கோட்டை ராஜா தலைமையில் நிலக்கோட்டை நால் ரோட்டில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் மலைச்சாமி, நகர தலைவர் வேல்பாண்டி, நகர துணைத் தலைவர் சுந்தரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். . நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!