17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி- மகாசிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ கோயிலுக்காக மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உசிலம்பட்டி- மகாசிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ கோயிலுக்காக மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எழுதியவர்: mohan March 11, 2021, 11:50 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பாப்பாபட்டி, கருமாத்தூர், கள்ளபட்டி, வகுரணி, நாட்டாமங்கலம், தும்மகுண்டு உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளது. இங்கே மகாசிவராத்திரியை முன்னிட்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த பகுதிகளில் உள்ள கோவிலுக்கு பாத்தியப்பட்ட மக்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் தங்களது குலதெய்வ கோவிலுக்கு இருசக்கர, நான்குசக்கர வாகனங்களில் வந்ததால் உசிலம்பட்டியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேலும் போக்குவரத்து போலீசார் போதிய அளவில் நியமிக்கப்படாததால் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த முடியாமல் போலீசார் தினறினர். இதனால் உசிலம்பட்டி பேரையூர் சாலை,தேனி சாலை,மதுரை சாலை உள்ளிட்ட சாலைகளில் 2கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்கள் அணிவகுத்து நின்றனர். அதனைதொடர்ந்து திருவிழா பாதுகாப்புக்கு வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர். போக்குவரத்து நெரிசலால் குலதெய்வ கோவிலுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்லமுடியாமல் மக்கள் பரிதவித்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!