17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் சென்ற டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து – இளைஞர் பலி விபத்து குறித்து மதுரை தெற்கு போக்குவரத்துபோலீசார் விசாரணை

முன்னாள் சென்ற டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து – இளைஞர் பலி விபத்து குறித்து மதுரை தெற்கு போக்குவரத்துபோலீசார் விசாரணை

எழுதியவர்: mohan March 10, 2021, 5:33 pm

மதுரை வில்லாபுரம் அருகே ஜெயவிலாஸ் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த டூவீலர் மீது பின்னால் வந்த காரியாபட்டியில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதில் டூவீலர் ஓட்டிவந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மதுரை அவனியாபுரம் அருகே உள்ள பராசக்திநகர் பகுதியில் வசித்துவருப்பவர் மகேஸ்வரன் என்பவரது மகன் மோகன்(22). இவர் இன்று வழக்கம் போல டூவீலரில் வேலைக்கு செல்லும் போது, மதுரை ஜெயவிலாஸ் பகுதியில் இவருக்குப் பின்னால் வந்த காரியாபட்டிலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து ஓட்டுநர், முன்னால் சென்று கொண்டிருந்த மோகனின் இருசக்கர வாகனத்தை இடித்துள்ளார்.இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த வாலிபர் மோகன் தலையில் பேருந்து மோதியதில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.இச்சம்பவம் குறித்து மதுரை நகர் தெற்கு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!