18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பார்வை திறனாளிகளுக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளைபாராட்டு.

பார்வை திறனாளிகளுக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளைபாராட்டு.

எழுதியவர்: mohan March 10, 2021, 10:26 am

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கண் பார்வையற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.சென்ற வாரம் கோவையில் தமிழ்நாடு மாநில பார்வையற்றோர் விளையாட்டு போட்டி நடைபெற்றது.இதில் மதரையை சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.இவர்களில் மதுரை கோ.புதூரில் அகவிழி பார்வையற்றோர் இல்லத்தில் தங்கி போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்ற திறனாளிகளுக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமை வகித்து விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.விழாவில் அவர் பேசுகையில்: பார்வையற்றோர் என்று அழைப்பதை தவிர்த்து பார்வை திறனாளிகள் அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.நமது அறக்கட்டளை சார்பில் விளையாட்டு போட்டிகள் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பார்வை திறனாளிகளை தொடர்ந்து நாம் ஊக்குவித்து வருகிறோம்.அந்த வகையில் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் தங்கியுள்ளவர்கள் தமிழ்நாடு மாநில அளவில் நடந்த பார்வை திறனாளிகள் விளையாட்டு போட்டியில் வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பரிசுகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.இவர்கள் அனைவருக்கும் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துகிறோம் என்றார்.இந்த நிகழ்சியில்ஒளிரும் மதுரை அமைப்பின் துரைவிஜயபாண்டியன், புத்தக தான வங்கி அமைப்பாளர் அசோக்குமார்,மாற்றம் தேடி பாலமுருகன், எம்மால் இயன்றது கண்ணன், சமூக ஆர்வலர் பெரியதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சி முடிவில் இந்த இல்லத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதிய உணவும் வழங்கப்பட்டது.விடுதி நிர்வாகி கோபி நிகழ்ச்சி நடத்திய வழிகாட்டி மணிகண்டன் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!