17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டிரான்ஸ்போர்மரில் திடீரெனதீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு .

டிரான்ஸ்போர்மரில் திடீரெனதீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு .

எழுதியவர்: mohan March 9, 2021, 2:37 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியான பேரையூர் ரோடு நந்தவன தெரு செல்லும் வழியில் சாலையோரத்தில் அமைந்துள்ளது மின் டிரான்ஸ்போர்மர்.இதன் மூலம் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வரும் சூழலில் இந்த டிரான்ஸ்போர்மரில் இன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள மின் டிரான்ஸ்போர்மரில் தீப்பற்றி எரிவதை கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.திடீரென ஏற்பட்ட தீயை மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தியதால் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உசிலைசிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!