18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ஹமீதியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தின விழா..

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 8, 2021, 7:26 pm

ஹமீதியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தின விழா பள்ளி தாளாளர் ஹாமிது இப்ராஹிம் மற்றும் முதல்வர் திருமதி பிரமிளா  மேற்பார்வையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பெற்றோர்களுக்கு சமையல் போட்டி நடத்தப்பட்டு பரிசும் வழங்கப்பட்டது. மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு வாழ்த்து மடலை வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.

இந்த விழாவிற்கு மண்டபம் DEO  முருகவல்லி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மண்டபம் D I ராமமூர்த்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.  மேலும்  மஹ்பூப் முபாரக்,  நுபுவத் ஆபிதா, பாத்திமா ஷாஜஹான்,  ரஷ்யா பாத்திமா, பெனாசிர் ஆமினா,  ஆய்ஷத் ருஸ்தானா ஆகியோர் சமையல் போட்டி நடுவர்களாக பங்குப் பெற்றார்கள்.

பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினரான  மரியம் ஜக்கியா இக்கல்வியாண்டின் பங்களிப்பை பற்றி உரையாற்றினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!