18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகேமகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து பலி.

மதுரை அருகேமகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து பலி.

எழுதியவர்: mohan March 8, 2021, 11:01 am

மதுரை அருகே மகனுடன் பைக்கில் சென்ற தாய் தவறி விழுந்து பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமங்கலம் மேலக்கோட்டையை சேர்ந்தவர் அம்சவள்ளி 45.இவரது மகன் செந்தில்குமார் 25. இவர்கள் இருவரும் உறவினரின் கிரகப்பிரவேச வீட்டிற்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் ரோடு திருமங்கலம் நான்கு வழி சாலையில் சென்றபோது பின்னால் இருந்த அம்சவல்லி கால்வழுக்கி தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தவிபத்துகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!