17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை கலங்கரை விளக்கம்… பொதுமக்களின் அழகிய பொழுது போக்கு…. ஆனால் பாதுகாப்பு மிக முக்கியம்… கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கனிவான வேண்டுகோள்…

கீழக்கரை கலங்கரை விளக்கம்… பொதுமக்களின் அழகிய பொழுது போக்கு…. ஆனால் பாதுகாப்பு மிக முக்கியம்… கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கனிவான வேண்டுகோள்…

எழுதியவர்: ஆசிரியர் March 7, 2021, 7:39 pm

கீழக்கரை கலங்கரை விளக்கம் நிர்வாகம் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களை அனுப்ப வேண்டும். கட்டணம் வருவதால் கூட்டத்தை அதிக அளவில் அனுமக்க கூடாது பொது மக்கள் பாதுகாப்பு முக்கியம் என கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பொதுமக்கள் பார்வைக்கு கீழக்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டது.  அதனை காண சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக சென்ற வண்ணம் உள்ளனர்.  இந்நிலையில் கலங்கரை விளக்கத்தை காண சென்ற விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த பாசில் இல்யாஸ் கூறியதாவது, “ இன்று (07/02/2021) கலங்கரை விளக்கம் சென்று இருதேன். அங்கு அதிக அளவில் ஆண்களும், பெண்களுக்கும், சிறு குழந்தைகள், கை குழந்தைகளும் காணப்பட்டன.

அதிக அளவில் கூட்டம் வருவதால் மேலே செல்ல பெண்கள் நெரிசலில் மிகவும் சிரமப்படுகின்றன. அது மட்டும் இல்லாமல் வர கூடிய 1to11வயது சிறுவர்கள் அதிக அளவில் இருப்பதால், குழந்தைகளை பராமரிக்கவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.

இதனால் கலங்கரை விளக்கம் மேல் பெண்கள் கவனாக செல்ல வேண்டும், பிள்ளைகளை  அருகில் வைத்து கொள்ள வேண்டும்,  கை குழந்தைகளை மேல கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் விடுமுறை நாளான  ஞாயிறு கிழமையில்  அதிக மக்கள் வருகின்றனர், இதை கருத்தில் கொண்டு கலங்கரை விளக்கம் நிர்வாகம் பார்வையாளர்களின் வரவை கட்டுப்படுத்த வேண்டும்.

அதே சமயம் கொரோனா இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், இரண்டாவது அலை என அரசு அறிவித்து வரும் நிலையில் பொதுமக்களும் அனைத்து விதமான முன்னெச்சரிக்கையும் கையாள வேண்டும்” என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!