திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது தொடா்பான செயல்விளக்க முகாம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, செங்கம் தனித்தொகுதி தேர்தல் அலுவலர் வெங்கடேசன் தலைமை வகித்தாா். பேருந்து நிலையப் பயணிகள், பொதுமக்கள், வணிகர்கள் இளைஞர்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலின்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.இதில், உதவி தேர்தல் அலுவலர் மனோகரன் மலர்க்கொடி, தனித்துணை வட்டாட்சியர், ஜெயபிரகாஷ், நாராயணன், முருகன் கிராம நிா்வாக அலுவலா் சந்திரகுமார், கிராம உதவியாளா் உள்பட பலா் கலந்து கொண்டனா்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பொதுமக்களுக்கு செயல்விளக்கம்.
எழுதியவர்: mohan March 7, 2021, 4:07 pm




You must be logged in to post a comment.