18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆலங்குளத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆலங்குளத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: mohan March 7, 2021, 10:48 am

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தாலுகா தலைவர் சங்கரன் தலைமை ஏற்றார். மாவட்டத்தலைவர் கணபதி துவக்க உரையாற்றினார் பீடிசங்க தாலுகா தலைவர் மாரியப்பன், மாதர் சங்க செயலாளர் மல்லிகா, சிஐடியு மாவட்ட துணை பொது செயலாளர் மகாவிஷ்ணு, விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா துணைத்தலைவர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலங்குளம் தாலுகா செயலாளர் குணசீலன் நிறைவுரை ஆற்றினார். விவசாய சங்க தாலுகா பொருளாளர் வெற்றிவேல் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கண்டபட்டி செயலாளர் பரமசிவன், புதுப்பட்டி செயலாளர் லிங்கராஜ், காசிநாநாதபுரம் செயலாளர் சங்கர், குருவன்கோட்டை செயலாளர் பால்ராஜ், மாதர் சங்கத்தலைவர் அழகுசுந்தரி,கீழ்பரும்புசெயலாளர் சமுத்திரகனி,5வதுவார்டு செயலாளர் கதிர் செல்வி, முன்னாள் மருதம்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் நல்லையா, வள்ளியம்மாள், குருவன்கோட்டை அம்பேத்கர் கிளை செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!