17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி.

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி.

எழுதியவர்: mohan March 7, 2021, 10:08 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் தேர்தல் அலுவலக உதவியாளர்கள் மற்றும் பல்வேறு நிலை அதிகாரிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு கையாள்வது பற்றிய சிறப்பு பயிற்சி நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சுப்பையா தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு நிலை அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தங்கையர்கரசி, வட்ட வழங்கல் அலுவலர் பாபு, மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் சென்ன கிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி,கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். படம் விளக்கம்: நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடந்த போது எடுத்த படம்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!