இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் சட்டவிரோதமாக கடத்த உள்ளதாக ராமநாதபுரம் எஸ்.பி., கார்த்திக்கிற்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., அறிவுறுத்தல் படி, ராமேஸ்வரம் காவல் உதவி எஸ்பி, தீபக் ஸ்கவாட்ச் தலைமையில் மண்டபம் போலீசார் வேதாளை கடற்கரை பகுதியில் இன்று மதியம் முதல் அதிரடி சோதனை நடத்தினர்.வேதாளை தெற்கு தெருவைச் சேர்ந்த அப்துல் ஜபார்என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகளை போலீசார் கண்டுபிடித்தனர். தலா 25 கிலோ வீதம் ஏழு மூடைகளில் இருந்த பதப்படுத்திய 175 கிலோ அட்டைகள்,16 பிளாஸ்டிக் பேரல்களில் ஊற வைத்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 8 பேர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
பதப்படுத்திய கடல் அட்டை 175 கிலோ பறிமுதல் .
எழுதியவர்: mohan March 5, 2021, 10:19 am




You must be logged in to post a comment.