17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் விருது வழங்கி கௌரவிப்பு.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் விருது வழங்கி கௌரவிப்பு.

எழுதியவர்: mohan March 5, 2021, 9:53 am

இன்றைய உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் நிகர் என்பதை உணர்த்தும் வகையில் பெண்கள் ஆண்களுக்கு போட்டியாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி உலகிற்கு சாதனை படைத்து வருகின்றனர்.பெண்களை போற்றும் வகையில் ஒவ்வோருவருடமும் மார்ச் 8ந்தேதி உலக மகளிர் தினம் கொண்டாடபடுகிறது.அந்தவகையில் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையிலும் பல்வேறு துறைகளில் சிறந்து பெண்மனிகளை கெளரவிக்கும் வகையிலும் ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை பிளாசம் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி தலைவர் ஸ்ரீலட்சுமி பசீந்தர் தலைமையில் நடைபெற்றது.விவசாயம், தொழில்முனைவோர், வணிகம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக சேவையாற்றியமைக்காக திருநங்கை உட்பட மகளிர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கபட்டது.இந்நிகழ்ச்சியில் செயலாளர் ஜெயந்தி கலைராஜம், ஏஜி தேவசேனா முரளி, அழகப்பன் சுந்தரவேல் உட்பட ஏராளமான பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!