18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் அதிகாலையில் அரங்கேறிய கொலை சம்பவத்தால் பரபரப்பு – போலீசார் விசாரணை.

மதுரையில் அதிகாலையில் அரங்கேறிய கொலை சம்பவத்தால் பரபரப்பு – போலீசார் விசாரணை.

எழுதியவர்: mohan March 4, 2021, 9:57 am

மதுரை எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்த பாட்சா 45 என்பவரை இன்று அதிகாலையில் 3 மணி அளவில் கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் தாக்கியதால் ஏற்பட்ட வெட்டுகாயங்களோடு ரத்த வெள்ளத்தில் மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள ஜின்னா திடல் ஆட்டோ ஸ்டான் அருகே கிடந்துள்ளார்.இதுகுறித்து மதுரை எஸ்எஸ் காலனி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாட்சாவின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மர்மமான முறையில் வெட்டுகாயங்களோடு இறந்து கிடந்த பாட்சா என்பவர் மீது மதுரை எஸ் எஸ் காவல்நிலையத்தில் ஏற்கனவே கூட்டு கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!