17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை SDPI பிரமுகர், பள்ளிகளுக்கு வேண்டுகோள்…

கீழக்கரை SDPI பிரமுகர், பள்ளிகளுக்கு வேண்டுகோள்…

எழுதியவர்: ஆசிரியர் November 22, 2017, 3:37 pm

கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்திட கீழக்கரை அனைத்து பள்ளிக்கூட நிர்வாகத்திற்கும் அன்பான வேண்டுகோள். இதுதொடர்பாக கீழக்கரை முன்னாள் கவுன்சிலரும் எஸ்டிபிஐ கட்சியின் பிரமுகருமான கீழை ஜஹாங்கீர் அரூஸி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நமதூரின் பாரம்பரியமிக்க பல்வேறு கலாச்சாரங்களில் ஒன்றாக பள்ளிக்கூட விடுமுறை நாளாக வெள்ளிக்கிழமை இருந்து வருகிறது என்பதை நாமெல்லோரும் நன்கறிவோம். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊராகவும் நமதூர் இருப்பதால்,வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு வசதியாக மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக நமது முன்னோர்கள் அறிவித்திருந்தனர்.

ஜும்ஆ நாள் என்பது ஏழைகளுக்கு ஹஜ்ஜாகவும்,மிஸ்கீன்களுக்கு பெருநாளாகவும் இருப்பது போன்ற சிறப்பினை வெள்ளிக்கிழமை பெற்றுள்ளது.அன்றைய தினம் நம் எல்லோருக்குமே ஒரு வகையான பேரானந்தமும் மகிழ்ச்சியும் இருக்கும். ஆனால்,தற்போது பல்வேறு பள்ளிக்கூட நிர்வாகங்களும் நமதூரின் வழக்கத்திற்கு மாற்றமாக வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க முயற்சிப்பதாக? கேள்விப்படுகிறோம்.

இதனால் நமது சமுதாயத்தின் ஆசிரியர்களும்,மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு, ஆதலால் தயவு கூர்ந்து பாரம்பரியமாக தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளை மாற்றம் செய்ய வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் கீழை ஜஹாங்கீர் அரூஸி கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!