17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏர்வாடி துணை மின் நிலையம் திறப்பு

ஏர்வாடி துணை மின் நிலையம் திறப்பு

எழுதியவர்: ஆசிரியர் November 21, 2017, 1:49 pm

கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் இன்று (21-11-2017) துணை மின் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஏர்வாடியின் துணை மின் நிலையம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்நிலையில் மின் நிலையம் திறக்கப்பட்டது, அப்பகுதி மக்களுக்கு ஒரு நம்மதியை தந்துள்ளது. இதுவரை கீழக்கரை மின் நிலையத்தில் இருந்து பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில் இனி கீழக்கரைக்கு அதிக தடங்கல் இல்லாத மின்சாரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இத்திறப்பு விழாவிற்கு மதுரை மின்நிலைய CE, இராமநாதபுரம் மின்பொறியாளர், கீழக்கரை உதவி மின் பொறியாளர் பால்ராஜ், மற்றும் மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஏர்வாடியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் இன்று 32 இடங்களில் துணை மின்நிலையங்கள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!