18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் நலிவடைந்து போன கைத்தொழிலை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

நிலக்கோட்டையில் நலிவடைந்து போன கைத்தொழிலை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

எழுதியவர்: mohan March 1, 2021, 11:05 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவிலில் விஸ்வ ஜன சக்தி தொழிற்சங்கப் பேரவை சார்பாக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் , நிலக்கோட்டை ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில துணைச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அழகுராஜா வரவேற்று பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது: பேரவை வளர்ச்சிக்காகவும் பேரவையை துரிதப்படுத்துவதற்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நிலக்கோட்டை விஸ்வகர்மா நகைப் பட்டறை, தச்சுப் பட்டறை, கொல்லு பட்டறை, சிற்பம், பாத்திரம் ஆகிய 5 தொழில்களும் நிலக்கோட்டை பகுதியில் ஆக காலங்காலமாக தொன்றுதொட்டு வந்த தொழில் நலிவடைந்த நிலையில் உள்ளது . இதனை இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப தொழிற்சாலையை உருவாக்கி பாதுகாக்கவேண்டும் என்று அரசை இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். கூட்டத்தில் நகர தலைவர் காமராஜ், நகர துணைத்தலைவர் தண்டபாணி, நகர செயலாளர் மாரிமுத்து நகரத் துணைச் செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்: நிலக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசுக்கு அனுப்பி வைக்க மாநிலத் துணைச் செயலாளர் சுரேஷிடம் வழங்கிய போது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!