ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே முனுசுவலசையைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் முனியசாமி, 42. மாற்றுத்திறனாளி. நேற்றிரவு வீடு சாப்பாட்டை முடித்து விட்டு தனது குடிசை வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் சிம்னி விளக்கு கவிழ்ந்து பற்றிய தீயில் சிக்கிய முனியசாமி தப்பிக்க முடியாமல் தீக்கிரையானார். முற்றிலும் எரிந்த தரை மட்டமான வீட்டில் கருகிக்கிடந்த முனியசாமி உடலை போலீசார் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பினர். இது குறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீயில் கருகி பலியான மாற்றுத்திறனாளி .
எழுதியவர்: mohan February 28, 2021, 2:14 pm




You must be logged in to post a comment.