17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அய்யப்பநாயக்கன்பட்டியில் உள்ள பெத்தன்னசாமி கோவில் மாசி திருவிழாவையொட்டி ஜல்லிகட்டு.

அய்யப்பநாயக்கன்பட்டியில் உள்ள பெத்தன்னசாமி கோவில் மாசி திருவிழாவையொட்டி ஜல்லிகட்டு.

எழுதியவர்: mohan February 28, 2021, 10:32 am

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் உள்ள பெத்தன்னசாமி கோவில் மாசி திருவிழாவையொட்டி கோலாகலமாக ஜல்லிகட்டு நடைபெற்றது. தொடங்கிய ஜல்லிகட்டு  மணிவரை நடைபெற்றது.. இதில் முன்பதிவு செய்யபட்ட 200 வீரர்களுக்கும், 650 காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யபட்டது.பரிசோதனைகளுக்குபின் 179 வீரர்கள் மட்டும் தேர்வாகி வாடிவாசலில் 4 சுற்றுகளாக களமிறக்கபட்டனர். பதிவு பெற்ற 600 காளைகளில் 516 காளைகள் மட்டுமே களம் கண்டது. இதில் வாடிவாசலில் சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் குத்துவிளக்கு,அண்டா, பிரிட்ஜ், கட்டில், பீரோ, டிரஸ்ஸிங் டேபிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.இந்த ஜல்லிகட்டில் 38 பேர் காயமடைந்தனர். 3 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கபட்டனர். மேலும் காளைகள் இருந்தும் வீரர்கள் பற்றாகுறையால் 4 சுற்றுகளில் போட்டி முடிந்ததால் மீதமுள்ள காளைகள் அவிழ்க்கபடாமல் ஜல்லிகட்டு விரைவாக முடிந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!