18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிராமப்புற மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் திருப்பரங்குன்றம் திமுக MLA திறந்து வைப்பு.

கிராமப்புற மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் திருப்பரங்குன்றம் திமுக MLA திறந்து வைப்பு.

எழுதியவர்: mohan February 27, 2021, 9:39 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பெரிய ஆலங்குளம் மற்றும் ஒத்தை ஆலங்குளம் கிராம மக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் நீண்டநாள் கோரிக்கையான விளையாட்டு மைதானத்தை திருப்பரங்குன்றம் திமுக MLA டாக்டர்சரவணன் திறந்து வைத்தார்.மேலும், விளையாட்டு மைதானத்திற்கு தேவையான குடிநீர் வசதிக்காக தனது சொந்த செலவில் போர்வெல் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.பின்னர் இளைஞர்களுக்கான வாலிபால் போட்டியை துவக்கி வைத்து, வெற்றி பெற்ற இளைஞர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் வேட்டையன், கழக பொறுப்பாளர்கள் தங்கவேல், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கப்பாண்டியன், ஊராட்சிமன்ற தலைவர்கள் சுப்பையா, பிரபு, ஒன்றிய கவுன்சிலர் அழகுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், மாணவர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!