17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் தமிழகம் இருண்டு கிடக்கிறது .

கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் தமிழகம் இருண்டு கிடக்கிறது .

எழுதியவர்: mohan February 27, 2021, 9:07 am

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், செங்கம் அடுத்த அம்மாபாளையம், புதுப்பாளையம் ,காரப்பட்டு பல்வேறு இடங்களில் முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது, கல்லூரி மாணவர்கள், “கல்லூரி சார்பில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாமில் 10 சதவீதம் பேருக்குக்கூட வேலைவாய்ப்பு கிடைப்பதில்லைகடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. தமிழகம் இருண்டு கிடக்கிறது. இதற்காகத்தான் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற நிகழ்ச்சியை திமுக நடத்தி வருகிறது. விரைவில் ஆட்சி மாற்றம் வரும், தமிழகம் முன்னேற்றப்பாதைக்கு செல்லும்” என்றார்.நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட கழக செயலாளர் எ.வ.வேலு , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை ,கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி ,செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ,புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் பொன்னி சுந்தரபாண்டியன் , திருவண்ணாமலை முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், கார்த்திக் வேல்மாறன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!